Breaking News

மார்ச் 1 முதல் ஆக31 வரை 6 மாதத்திற்கான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 


இதனை கருத்தில் கொண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு கடன் தவணைகளை ஒத்தி வைக்கப்பட்டது. 

ஆனால், சில வங்கிகள் வட்டி வட்டி வசூலிப்பதாக புகார் எழுந்தது.வங்கிக் கடன்களுக்கு வட்டி வட்டி வசூலிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அந்த மனுவில்  மத்திய அரசு சமீபத்தில்  இரண்டு கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்களின் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் முறையை ரத்து செய்யப்படுவதாக பிரமாண பாத்திரம் தாக்கல் செய்தது.

இந்நிலையில் 6 மாதத்திற்கான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி  தள்ளுபடி செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை எனவும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ரூ 2 கோடி வரையிலான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் 

இந்த தள்ளுபடி வீட்டுக் கடன், கிரெடிட் கார்டு கடன், தனிநபர் கடன், சிறுகுறு தொழில் கடன் , கல்வி கடன் , வாகன கடன் ஆகியவைகளுக்கு  வட்டிக்கு கூடுதல் வட்டி இல்லை எனவும்  அனைத்து தேசிய வங்கிகளிலும் கடன் பெற்ற பயனாளிகளுக்கு வட்டி சலுகை வழங்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback