Breaking News

அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு - தமிழக அரசு TN CM Press Release - PDF

அட்மின் மீடியா
0

அக்டோபர் 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு - தமிழக அரசு TN CM Press Release - PDF

தமிழகத்தில் தளர்வுகளுடன் அக்..31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.

உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. 

பார்சல் சேவை இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 100 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கடற்கரைகளுக்கு தொடர்ந்து தடை நீட்டிப்பு

மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும்.

திரையரங்குகளுக்கான தடை நீடிக்கும் 

ஊரக, நகரப்பகுதிகளில் வாரச்சந்தை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை நீடிக்கும்.

மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

புறநகர் மின்சார ரயில் போக்குவரத்துக்கான தடை நீடிக்கும்.

மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.


https://drive.google.com/file/d/1KzXki7hu72nIq74LgQeFUL8S_rIBoND0/view?usp=sharing



lockdown TN CM Press Release - PDF

null

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback