Breaking News

FACT CHECK: நீட் தேர்வில் வெற்றி பெற்றவர் பேசும் ஆங்கிலம் என்று பரவும் வீடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

சமூக வலைதளங்களில் பலரும்  வடக்கன்ஸ் நீட் தேர்வில் பாஸ் ஆன உடன் எடுத்த பேட்டி என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ளவர் நீட் தேர்வு மாணவர் இல்லை மேலும் அவர் நீட் தேர்வும் எழுதவில்லை

அந்த வீடியோவில் உள்ளவர் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த  சுக்கூர் அலி என்பவர் ஆவார் இவர் ஓர் காமெடி அரசியல் வாதியாவார் இவர் கடந்த  2019 நாடாளுமன்றத் தேர்தலில் அஸ்ஸாமின் துப்ரி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 

இவர் கடந்த ஜூலை 26 ம் ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலத்தின் கொரோனாவைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை பா.ஜ.க-வைச் சேர்ந்த சுகாதாரத் துறை அமைச்சரை விமர்சித்து அளித்த பேட்டிதான் அது

அதில் அவர் because என்று சொல்லும் அந்த பகுதியை மட்டும் கட் செய்து அவரை பற்றி மீம்கள் பல பரவி வருகின்றது 

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர் என்று பொய்யாக பரப்பிவருகின்றார்கள்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback