FACT CHECK: லலிதா ஜுவல்லரி கொராணா நிவாரண நிதி தமிழகத்திற்க்கு கொடுக்கவில்லையா? உண்மை என்ன....
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் ரெட்டி பிறந்து வளர்ந்தது நெல்லூர். பிழைக்க வந்தது சென்னை. சாதாரண நடுத்தர குடும்பம் இன்று தென்னிந்தியாவில் 15கடைகள் பல ஆயிரம் கோடி சொத்துக்கள். கொரானா நிவாரண நிதியாக தலா ஒருகோடி ஆந்திர தெலுங்கானா மாநிலங்களுக்கு. ஆனால் தமிழகத்திற்கு ஒன்றுமில்லை. இதுதான் தமிழ்நாட்டு நிதர்சனம். இது போலவே தமிழகத்தில் பிழைப்பு நடத்த வந்த கன்னடர், மலையாளிகள், தெலுங்கர்கள், குஜராத்திகள், ராஜஸ்தானிகள் என அவரவர் மாநிலங்களுக்கே பண உதவிகள் நலம் செய்வர். தமிழக பணத்தைக் கொண்டு தமிழர் விழிப்பாக இருந்து அயலவருக்கு வணிகத்தில் லாபத்தை அள்ளி கொடுக்காமல் இருப்பது மாநில வளர்ச்சிக்கு நன்மையே என்று ஒரு செய்தியை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
லலிதா ஜுவல்லரி உரிமையாளர் கிரண் குமார் ஆந்திரா மற்றும் தெலங்கானாவுக்கு மட்டும் நிவாரணம் வழங்கிவிட்டு தமிழகத்தைப் புறக்கணித்தார் என்ற செய்தி உண்மையில்லை
உண்மையில் அவர் தமிழகத்திற்க்கும் கொரானா நிதி கொடுத்துள்ளார் என்பது தான் உண்மையாகும்
கடந்த மே மாதம் 26 ம் தேதி தினமலரில் வெளிவந்த செய்தியில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு, தலா, 1 கோடி ரூபாய் கொரானா நிவாரணம் வழங்கி உள்ளேன். மக்கள், அரசு ஆதரவில் தான், இவ்வளவு துாரம் வளர்ந்துள்ளோம். கொரோனா நிவாரண நிதி வழங்கியதை, என் கடமையாக நினைக்கிறேன் என கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளார்கள்
மேலும் லலிதா ஜுவல்லரி உரிமையாளர் கிரண் குமார் அவர்கள் கொரானா நிவார நிதி யாக ஆந்திரா, தெலங்கானா முதல்வர்களை நேரில் சந்தித்து உதவி வழங்கியுள்ளார் அதே போல் தமிழகத்தில் தலைமைச் செயலாளரிடம் ரூ.1 கோடிக்கான காசோலை கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK தமிழக செய்திகள்