Breaking News

FACT CHECK: பாகிஸ்தானை சேர்ந்த குத்துசண்டை வீரங்கனையை எதிர்த்த தூத்துகுடி கவிதா என பரவும் பொய் செய்தி

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  பாகிஸ்தானைச் சார்ந்த குத்துச்சண்டை வீராங்கனை மும்பையில் நடைபெற்ற போட்டியில் வென்ற வீராப்பில் என்னை வெல்ல இந்தியாவில் எவரும் இல்லை என கர்ஜித்த போது கூட்டத்தின் நடுவே இருந்த தூத்துக்குடியை சார்ந்த இளம் பெண் கவிதா துணிச்சலுடன் மேடை ஏறி எதிர்கொண்ட காட்சி... வாழ்க தமிழினம்என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

அந்த வீடியோவில் உள்ளவர்கள் இருவருமே இந்தியர்கள் ஆவார்கள், 

அந்த வீடியோ தற்செயலாக சவால் விட்டு எடுக்கபட்டவீடியோவும் அல்ல

அந்த வீடியோ CWE எனப்படும் Continental Wrestling Entertainment is the first Indian Wrestling Entertainment Academy. ஆகும்

மேலும் பிரபல ரெஸ்லர் கிரேட் காளி அவர்களுடைய அகாடமியாகும் அவர் ஜலந்தரில் இந்த அகாடமியை கடந்த 1996 ம் ஆண்டு துவக்கினார்

இந்த அகாடமியில் பிரபல WWE போல பல போட்டிகள் CEW விலும்  நடக்கும் அந்த வகையில் நடந்த போட்டிதான் அது

மேலும அந்த  போட்டி கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்றது ஆகும்


ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும் தூத்துகுடி பெண் என்றும் சமூக வலைத்தளங்களில் பொய்யாக பரப்பி வருகிறார்கள்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்



Tag; Pakistani wrestler beaten by kavitha

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback