Breaking News

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை

அட்மின் மீடியா
0

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி 6.12.1992 அன்று  இடிக்கப்பட்டது 

                                   


அது தொடர்பான வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி உள்ளிட்ட 32 பேர் மீதான வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது .

லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திரகுமார் யாதவ் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்குகிறார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாகும் நிலையில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 6 பேரை தவிர மற்ற அனைவரும் லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சதீஷ் பிரதான், நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜர்ஆனார்கள்

பிறகு 2000 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் பாபர் மசூதி இடிப்பு என்பது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒன்று அல்ல. 

இந்த வழக்கில் போதுமான சாட்சியங்கள், ஆதாரங்கள் இல்லை. அதனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர் என  லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது





Tags: இந்திய செய்திகள்

Share this