7-ஆம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்சேவையா ? தெற்கு ரயில்வே விளக்கம்
அட்மின் மீடியா
0
வரும் 7ஆம் தேதி முதல் சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்ததாக தகவல் வெளியான நிலையில் அது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் அறிவிக்கவில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை புறநகர் மின்சார ரயில் எப்போது இயக்கப்படும் என பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் 7ஆம் தேதி முதல் சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்ததாக தகவல் வெளியான நிலையில் இத்தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தென்னக ரயில்வே, சென்னையில் தற்போது வரை புறநகர் ரயில் சேவை இயக்குவது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்