Breaking News

FACT CHECK:ரஃபேல் விமாங்களை இந்தியாவிற்க்கு அனுப்பி வைக்கும் முன் பிரான்ஸில்....என ஷேர் செய்யப்படும் வீடியோ உண்மையா

அட்மின் மீடியா
0
ரஃபேல் விமாங்களை இந்தியாவிற்க்கு அனுப்பி வைக்கும் முன் பிரான்ஸில்.... என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

முதலில் அந்த பிரமாண்டமான கட்டடத்திற்க்கு முன் பறக்கும் கொடி பிஃரான்ஸ் நாட்டுகொடி இல்லை. அந்த கொடி பார்க்க இந்திய கொடி போல் தோற்றமளிக்கும் இத்தாலி நாட்டு கொடியாகும் பிரான்ஸ் நாட்டு கொடியில் பச்சை வண்ணமே கிடையாது 

அப்படியே அது இந்தியாவின் தேசிய  கொடி போன்று தெரிந்தாலும், கொடியில் உள்ள வர்ணங்கள் வலதில் பச்சையும், நடுவில் வெள்ளையும்,  இடதில் சிகப்பும்    உள்ளது 

நமது தேசிய கொடியில் காவி  நிறம் மேல் புறம்,  நடுவில் வெள்ளையும், கீழே பச்சை என்றுதான் இருக்கும்

ஆகவே  அங்கு பறக்கும் கொடி வர்ணங்கள் எல்லாம் மேல் இருந்து கீழே இல்லாமல், வலமிருந்து இடது புறமாக இருக்கின்றது

பிரான்சின் கொடியில் இடது புறம் ஊதா நிறமும்,  நடுவில் வெள்ளையும், வலது புறம் சிகப்பும் இருக்கும்

மேலும் பலருரும் ஷேர் செய்யும் வீடியோ  நிகழ்வு நடந்தது 

ஜூன் 2, 2018 அன்று இத்தாலியின் ரோம் நகரில் குடியரசு தினத்தை குறிக்கும் விழாவின் போது இத்தாலிய ஃப்ரீசே ட்ரிகோலோரி ஏரோபாட்டிக் அணி நிகழ்ச்சியாகும் 

அந்த வீடியோவை ரபேல் விமானம் என பொய்யாக பரப்புகின்றார்கள்



அட்மின் மீடியா ஆதாரம்


அட்மின் மீடியா ஆதாரம்

https://en.m.wikipedia.org/wiki/Flag_of_Italy

அட்மின் மீடியா ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback