FACT CHECK: குஜராத்தில் மஸ்ஜித்தை இடித்துவிட்டார்கள் என பரவும் வதந்தி ... உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் குஜராத் அகமதாபாத்தில் 20 வருடங்களாக இந்த மஸ்ஜிதின் ஜாமீன் சம்பந்தமாக
விவாதம் நடந்து கொண்டு இருந்தது. ஆனால் மோடி, அந்த மஸ்ஜிதை நேற்று இடித்து
விட்டான் என்று ஒரு மசூதியின் புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் புகைப்படம் மசூதியில் புகைபடம் இல்லை அது ஒரு தர்கா ஆகும் அந்த தர்கா பெயர் குல்லு பாபா தர்கா ஆகும்
மேலே உள்ள அந்த தர்கா இடிப்பு சம்பவம் குஜராத்தில் உள்ள அகமதாபாத் அருகில் உள்ள ஜூஹூபுரா என்ற இடத்தில் கடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்றது ஆகும்
அந்த பகுதி நகர விரிவாக்கப் பணிகளுக்காக, அரசு ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டிருந்த தொழிற்சாலைகள், கடைகள், வீடுகள், குடோன்கள் மற்றும் அந்த தர்கா ஆகியவை இடிக்கப்பட்டுள்ளது
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Ahmedabad: llegally built Mosque demolished in extended Juhapura Ahmedabad by AMC -> http://t.co/8GiAuPpQGw -> pic.twitter.com/lZzucptNMC— Praveen Upadhyaya (@PraveenraoU) August 7, 2014
Tags: FACT CHECK மறுப்பு செய்தி