Breaking News

உங்கள் பள்ளி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டால் திரும்ப பெறுவது எப்படி?

அட்மின் மீடியா
1


உங்கள் பள்ளி மதிப்பெண் பட்டியல் தொலைந்துவிட்டால்  யாரை அணுகுவது..? எப்படி வாங்குவது என்பதை பற்றி பார்ப்போம்


முதலில் நீங்கள் உங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில்  புகார் அளிக்க வேண்டும்.

அதன் பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும். 

அடுத்து தாசில்தாரிடம் மனு கொடுத்து அவரிடமும் அதே போல்  சான்றிதழ் பெற வேண்டும்.

அதன் பின்பு சான்றிதழ் நகல் பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு வங்கி வரவோலை வாங்க வேண்டும்.  அதன் பின்பு மாவட்ட கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கவேண்டும்


 மேலும் விவரங்களுக்கு:

http://www.dge.tn.gov.in/docs/DUP.pdf


10 ம் வகுப்பு சான்றிதழ் தொலைந்தால் விண்ணப்பிக்க வேண்டி மனு

http://www.dge.tn.gov.in/docs/services/Duplicate_Certificate_form_for_sslc.pdf


12 ம் வகுப்பு சான்றிதழ் தொலைந்தால் விண்ணப்பிக்க வேண்டி மனு


http://www.dge.tn.gov.in/docs/DUP_HSC.pdf

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback

1 Comments

  1. College degree certificate தொலைந்து விட்டது அதற்கும் இதே formula தானா

    ReplyDelete