Breaking News

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்...தலைமைச் செயலாளர்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.


கொரோனா ஊரடங்கினால் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு இ-பாஸ் பெறுவது கட்டாயம். ஆனால் அவசர தேவைக்கு இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் கூட  அனுமதி கிடைப்பதில்லை என்று புகார் எழுந்து மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்தொடர் புகார்களை அடுத்து இ பாஸ் நடைமுறையை தமிழக அரசு கைவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது
இதனால் பெரும்பாலான மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த புகார்களை தொடர்ந்து இ பாஸ் நடைமுறையை தமிழக அரசு கைவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும். மேலும், இ பாஸ் வழங்குவதில் குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க அறிவுறுத்தி உள்ளோம்; நோய்த் தொற்று அறிகுறி தோன்றுவதற்கு முன்பே நோயாளிகளை கண்டறிய முகாம்கள் உதவும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback