Breaking News

சமூக வலைத்தளங்களில் வரக்கூடிய செய்திகள் உண்மையா..? பொய்யா..? என்று நாம் எப்படி கண்டு பிடிப்பது...!?

அட்மின் மீடியா
2

சமூக வலைத்தளங்களில் வரக்கூடிய செய்திகள் உண்மையா..? பொய்யா..? என்று  நாம் எப்படி கண்டு பிடிப்பது...!?




எனக்கு அந்த செய்தி வந்தது ஆகையால் நான் ஷேர் செய்தேன் என கூறவேண்டாம் 

நீங்கள் ஒரு செய்தியினை ஷேர் செய்தால் அதற்க்கு நீங்கள் தான் பொறுப்புதாரி ஆவீர்கள்

ஆகையால் உங்களுக்கு ஒரு செய்தி வந்தால் அதனை ஷேர் செய்யும் முன்பு நீங்கள்  அந்த செய்தி பற்றி சந்தேகம் கொள்ளுங்கள். 

இந்த செய்தி உண்மையா?

இந்த செய்தி ஷேர் செய்தால் நம் நாட்டுக்கும் ,நம் நாட்டுமக்களுக்கும் ஏதாவது நன்மை கிடைக்குமா?

அல்லது இந்த செய்தியினால் ஏதாவது விழிப்புணர்வு ஏற்படுத்தமுடியுமா என்று சிந்தியுங்கள் நீங்கள் ஷேர் செய்யும் அந்த செய்தி இந்த வரையறைக்குள் வரவில்லை என்றால் இந்த நாட்டுக்கும் இந்த நாட்டுமக்களுக்கும்  நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான் ,அந்த செய்தியினை கட்ந்து போக கற்றுகொள்ளுங்கள்

நீங்கள் ஷேர் செய்யும் முன்பு அந்த செய்தி உண்மையா ?அல்லது பொய்யா என எவ்வாறு கண்டுபிடிப்பது? வாங்க தெரிந்து கொள்ளலாம்



1 :- உங்களுக்கு ஒரு செய்தி வந்ததும் அதை முழுமையாக படிக்க வேண்டும்.

2 :- பார்வர்ட் செய்வதற்கு முன்னர்..நன்கு சிந்தித்து பார்க்க வேண்டும் 

3 :-  இது உண்மையாக இருக்குமா? 

 4 :- இது எப்படி உண்மையாக இருக்கும்? என்று..!

5 :-  அந்த செய்தியில் ஃபோன் நம்பர் இருந்தால் அதற்கு ஃபோன் செய்து விசாரிக்க வேண்டும்.

6 :- இந்த செய்தி ஏதாவது ஃபிளாஷ்  நியூஸ் பிரேக்கிங் நியூஸ் வந்துள்ளதா..? என்று பார்க்க வேண்டும்

7 :-  அதுவும் இல்லையென்றால் கூகுலுக்கு சென்று இந்த தலைப்பை டைப் செய்து.. ஒரு தடவை சர்ச் பண்ணி பார்க்க வேண்டும்.

8 :-   அப்படி  இது போன்ற செய்திகள் எதுவும் கிடைக்கவில்லை என்றால் நமக்கு வந்த  அந்த செய்தி பொய் என்று உறுதி செய்யுங்கள்..

நம்பவும் வேண்டாம் .. ஷேர் செய்யவும் வேண்டாம்.

 இந்த உலகத்துல நானும்  ஒரு பொய்யை தடுத்து  விட்டேன்  என்று காலரை தூக்கிவிட்டு பெருமையோடு செல்லுங்கள்..

உங்களுக்கு அந்த செய்தி மீது சந்தேகம் இருந்தால் அந்த செய்தியுனை ஷேர் செய்யாதீர்கள்


அல்லது கடந்த 8 ஆண்டுகளாக சமூக வலைதளங்களில்சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளை தடுக்க   FACT CHECK செய்து வரும் அட்மின் மீடியாவிடம் உங்கள் செய்தியின் சந்தேகங்களை கேளுங்கள் 


மேலும் இதுவரை கடந்த 8 ஆண்டுகளாக நாம் FACT CHECK செய்திகளின் தொகுப்பு சுமார் 600 க்கும் மேற்பட்ட பொய் செய்திகளின் உண்மையை தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்க....




அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இணைய



Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback

2 Comments

  1. கூகுலில் மறைக்கப்பட்ட செய்தி என்றும் எந்த ஊடகங்களும் வெளியிடாத செய்திகள் என்றும்
    Youtube அழித்து விட்ட வீடியோ என்றும்..
    வரும் செய்திகளின் உண்மை நிலையை எப்படி அறிவது??

    ReplyDelete
  2. மிகவும் அருமையான பதிவு
    மக்களுக்கு தேவையான தலைப்பு
    உங்கள் சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete