ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 4 மருத்துவ கல்லூரி மாணவர்கள் பலி
அட்மின் மீடியா
0
ரஷ்யாவின் வோல்கா நதியில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த 4 மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவின் வோல்கா நதியை பார்வையிட சென்றனர்.
அப்போது, நண்பர்களுடன் நதியில் குளிக்க சென்ற போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர்.
அதில், தமிழ்நாடு, தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆசிக், சென்னையை சேர்ந்த ஸ்டீபன், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ் மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகியோர் பரிதாபமாக மூழ்கி இறந்ததாக கல்லுாரி நிர்வாகம், அந்நாட்டில் உள்ள இந்திய துாதரகத்துக்கு தெரிவித்துள்ளனர். மாணவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்