Breaking News

இலங்கையில் மீண்டும் மகிந்தா ராஜபக்சே பிரதமர் ஆகிறார் ராஜபக்சே கட்சி அபார வெற்றி: 145 இடங்களை கைப்பற்றியது!

அட்மின் மீடியா
0
இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுன கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி மொத்தம் 145 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது



இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேவின் பொது ஜன பெரமுன கட்சி, சஜித் பிரேமதாஸவின் மக்கள் சக்தி கட்சி, ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, சம்பந்தன் அவர்களின் தமிழரசுக் கட்சி ஆகிய நான்கு கட்சிகள் போட்டியிட்டதால் 4 முனை போட்டி ஏற்பட்டது

இந்த நிலையில் நேற்று இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே முன்னிலை பெற்று வந்த ராஜபக்சே கட்சி வாக்கு எண்ணிக்கை முடிவில் 145 இடங்களில் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களிலும், சம்பந்தனின் தமிழரசு கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback