Breaking News

பதஞ்சலி நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் !! சென்னை உயர்நீதிமன்றம்

அட்மின் மீடியா
0
கொரோனாவை குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 


சென்னை திருவான்மியூர் ஆருத்ரா இன்ஜினியர்ஸ் என்ற தனியார் நிறுவனம்  கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான கொரோனில் 92 பி', 'கொரோனில் 213 எஸ்பிஎல்' என்ற பெயரில் தயாரித்து வருகிறது. மேலும் கொரோனில் என்ற பெயருக்கு வணிகச் சின்னத்தையும் பதிவு செய்து 2027 ம் ஆண்டு வரை செயல்பாட்டில் வைத்துள்ளோம் எனவும் 

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கு “கொரோனில்” என பெயர் சூட்டியுள்ளதாகவும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதால், தங்கள் நிறுவனத்தின் வணிகச் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக கூறி  ஆருத்ரா நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் வணிகச் சின்ன பதிவுத்துறையில் கொரோனில் என்ற பெயரில் ஏதேனும் பொருட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என விசாரிக்காமல், அதே பெயரில் மாத்திரை தயாரித்துள்ளதால், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

மேலும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகச் சொல்லி, மக்களின் அச்சத்தையும், பீதியையும் பயன்படுத்தி மேலும் லாபம் பார்க்க முயற்சிப்பதாகக் கூறி, அந்நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

பதஞ்சலி நிறுவனத்தின் அபராத தொகையில் ரூ.5 லட்சம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும், மீதி 5லட்சம் பணத்தை அரும்பாக்கம் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிக்கும் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback