Breaking News

வால்வுடன் உள்ள N95 வகை முககவசங்களை பயன்படுத்த வேண்டாம் - மத்திய அரசு

அட்மின் மீடியா
0
வால்வு பொருத்தப்பட்ட N95 முகக்கவசம் பயன்படுத்துவது கொரானா பரவலை தடுக்காது. என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.




முகக்கவசம் அணிவது தொடர்பான எச்சரிக்கை கடிதம் ஒன்றை, மத்திய சுகாதார சேவைகளின் பொது இயக்குனர், மாநில சுகாதார மற்றும் மருத்துவ கல்வி முதன்மைச் செயலர்களுக்கு அனுப்பியுள்ளார்.

அதில் வால்வு பொருத்தப்பட்ட N 95 முகக்கவசத்தின் பொருத்தமில்லாத வகையில் பயன்படுத்துவதை காண முடிகிறது. குறிப்பாக வால்வுடன் கூடிய முகக்கவசங்களை பலரும் பயன்படுத்துகின்றனர். 

இந்த முகக்கவசம் ஒருவரிடமிருந்து கரோனா வைரஸ் கிருமி வெளியேறுவதை தடுக்காது. இதனால் நோய் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக முடியும். 

எனவே அனைவரையும் மூக்கு, வாயை முழுவதுமாக மூடும் முகக்கவசத்தை பயன்படுத்த வலியுறுத்துங்கள். பொருத்தமற்ற முறையில் என்-95 முகக்கவச பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் என்று சுகாதரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback