FACT CHECK: கொரானாவால் இறந்தவர்களின் உடலில் இருந்து உறுப்புகளை எடுக்கின்றார்கள் என ஷேர் செய்யப்படும் செய்தியின் உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கொரோனாவால் இறந்தவர்களின் உடலிலிருந்து கண் கிட்னி போன்ற முக்கிய உறுப்புகளை திருடிவிட்டு வெறும் உடலை மட்டும் யாரும் பார்க்க முடியாத அளவிற்கு துணியால் சுற்றி அதை புதைப்பதற்கு கொடுத்துவிடுகிறார்கள் எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள் மும்பையில் மனோரி கிராம்த்தில் நடந்தபோது மக்கள் போராட்டம் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் வீடியோவில் உள்ள போராட்டம் மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில் உள்ள மனோரியில் நடந்தது தான் ஆனால் அது இறந்துவிட்டர்களின் உடலில் உறுப்புகளை திருடி விட்டார்கள் என்பதற்க்காக அல்ல
அந்த வீடியோவில் உள்ளவர்கள் மராத்தி பேசுகின்றார்கள் எனவே நமக்கு தெரிந்த மும்பை நண்பர்களை வைத்து விசாரித்ததில்
மனோரி என்ற கிராமத்தில் ஒருவருக்கு கொரானா வந்துவிட்டது ஆகையால் அவரை அருகில் உள்ள விட்டதால் அவரை சுமார் 35 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள மலாட் என்ற பகுதியில் சிகிச்சை அளித்து வருகின்றார்கள், மேலும் BMC ஊழியர்கள் Corpration அவர்களது உறவினர்களையும் கோரண்டைனில் வைக்க அழைத்து செல்ல ஒரு வாகனத்தை எடுத்து வந்துள்ளார்கள், அதற்க்கு அந்த உறவினர்கள் எங்களுக்கு கொரானா இல்லை நாங்கள் வரமுடியாது எனவும் மேலும் இங்கேயே எங்காவது எங்களை கோரண்டைனில் தங்க வையுங்கள் என்றும் கூறியதை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் தான் அந்த வீடியோ
மேலும் எந்த செய்தி வந்தாலும் ஷேர் செய்யாமல் சிந்தியுங்கள் நீங்கள் சிந்திக்க அட்மின் மீடியாவின் கேள்விகள்....
- கொரோனாவால் இறந்தவர்களின் உடலை யாரும் தொட முடியாத மாதிரி பேக் செய்து அதை வந்து சுடுகாட்டில் புதைக்கிறார்கள் ஒரு சில இடங்களில் எரிக்கிறார்கள்.
- கொரோனாவால் இறந்தவர்களின் உடலைக் கூட தொடுவதற்கு அனுமதி இல்லை இப்படி ஒரு சூழ்நிலையில் அந்த உடலில் உள்ள உறுப்புகளை மட்டும் எடுத்து என்ன செய்ய போகிறார்கள்
- முக்கியமாக கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை யாரும் போஸ்ட்மார்ட்டம் செய்ய மாட்டார்கள்.அப்படியே உடலை மருந்து தெளித்து அடக்கம் செய்து விடுவார்கள்.
- அந்த உடலை யாரும் தொடமுடியாது அப்படி இருக்கும் சமயத்தில் அந்த பேஷண்ட் பக்கத்தில் கூட யாரும் போக மாட்டார்கள் அந்த அளவுக்கு பயம் இருக்கிறது அப்போது கொரானா பாதித்த உடல்களில் இருக்கக்கூடிய உறுப்புகளை வைத்து அவர்கள் என்ன பண்ணுவாங்க எதுவுமே பண்ண முடியாது அதை தொடுவதற்கு கூட பலரும் யோசிப்பாங்க
- போஸ்ட்மார்ட்டம் என்பது விபத்தில் இறந்தவர்கள் மற்றும் சூசைட் செய்தவர்களுக்காக மட்டும் தான் , மேலும் சந்தேக மரணங்களுக்குமட்டும் தான், இயற்க்கை மரணம் அடைந்தவர்களுக்கு போஸ்ட்மார்ட்டம் செய்வது கிடையாது
உண்மை இப்படி இருக்க சமூக வலைதலங்களில் பொய்யாக பரவிவருகின்றது எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி