Breaking News

FACT CHECK: அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட 89 தரமற்ற கல்லூரிகளின் பட்டியல் என பரவும் பொய் செய்தி: யாரும் நமபாதீர்கள்

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட 89 தரமற்ற கல்லூரிகளின் பட்டியல் என ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

அந்த செய்தி சமூக வலைதளங்களில் கடந்த 2019ம் ஆண்டே பரவியது அப்போதே அண்ணா பல்கலைகழகம் அந்த செய்தி பொய்யானது அது போல் எந்த ஒரு பட்டியலையும் நாம் வெளியிடவில்லை என மறுப்பு வெளியிட்டது

அதே பொய்யான அந்த வதந்தி செய்தி தற்போதும் வைரலாக பரவி வருகின்றது இந்நிலையில் அண்ணா பல்கலை பதிவாளர் கருணாமூர்த்தி, அவர்கள்  மறுப்பு செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்

அதில் சமூக வலைதளங்கள் மூலம் பல்கலை கழக மாண்பைக் குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரை செய்யப்படும்.என எச்சரித்துள்ளார்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


அட்மின் மீடியாவின் ஆதாரம்



அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://tamil.news18.com/news/education/anna-universty-explains-about-fake-news-on-engineering-college-174225.html


அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.hindutamil.in/news/tamilnadu/566609-anna-university.html?frm=rss_more_article 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback