Breaking News

தமிழக அரசின் சிறுபான்மையினருக்கு கடனுதவி ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?

அட்மின் மீடியா
0
சிறுபான்மையின மக்கள், சுயதொழில் தொடங்க தமிழக அரசின் டாம்கோ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் 




தமிழ்நாட்டில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள், ஜெயின் பிரிவை சார்ந்த சிறுபான்மையின மக்கள், சுயதொழில் தொடங்க குறைந்த வட்டி விகிதத்தில், தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி கழகத்தின் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. 

தற்போது இந்த திட்டத்திற்க்கு ஆன்லைன் மூலம் நீங்கள் விண்ணப்பிக்கலாம்


கடன் பெற தகுதியுடையோர்

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள், ஜெயின் பிரிவை சார்ந்த சிறுபான்மையின மக்கள், 

வயது வரம்பு 

குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம்  60 வயது

ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். 


விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்


  • ஆதார் அட்டை நகல், 


  • ஜாதி சான்றிதழ், 


  • பள்ளி மாற்று சான்றிதழ் நகல், 


  • வருமான சான்றிதழ் நகல் 


  • திட்ட அறிக்கை


  • குடும்ப அட்டை நகல்


  • கடன் பெறும் தொழில் குறித்த விபரம்


  • ஓட்டுநர் உரிமம் ( போக்குவரத்து வாகனக் கடனாக இருந்தால்)


  • வங்கி கோரும் இதர ஆவணங்கள்


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க


மேலுள்ள லின்ங் கிளிக் செய்து அதில் SCHEMES என்ற பக்கம் சென்று நீங்கள் விண்ணப்பிக்கலாம்





Tags: மார்க்க செய்தி முக்கிய செய்தி

Give Us Your Feedback