கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை முடக்க காவல்துறை பரிந்துரை!
அட்மின் மீடியா
0
கறுப்பர் கூட்டம்" யூடியுப் சேனலை முடக்கக்கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் யூடியுப் நிறுவனத்திற்கு பரிந்துரை கடிதம் எழுதியுள்ளனர்
கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பும் வகையில், வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி, செந்தில்வாசன் கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாக இருந்த சுரேந்தர் நடராஜன் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.இந்நிலையில், கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை முடக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, கறுப்பர் கூட்டம் சேனலை முடக்க பரிந்துரை செய்து யூ டியூப் நிறுவனத்திற்கு, சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்
Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு