நெய்வேலி அனல்மின் நிலைய விபத்து: 5 பேர் பலி
அட்மின் மீடியா
0
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது பாய்லரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், என்எல்சி ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 17 பேர் பலத்த காயங்களுடன் நெய்வேலி அரசு மருத்துவமனையில் 17 பேர் பலத்த காயங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட அனல்மின் நிலைய பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்புப் பணிகள் முழுமை அடைந்த பிறகே எத்தனை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்