108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.. மருத்துவ உதவியாளர் வேலை..உடனே விண்ணப்பிக்க அழைப்பு
அட்மின் மீடியா
0
108 ஆம்புலன்ஸ் சேவையில் காலியாக உள்ள ஓட்டுநா் மற்றும் மருத்துவ உதவியாளா் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தொலைபேசியில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க:
- 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் வைத்திருக்கவேண்டும்
- வயது வரம்பு 24 - 35 வயதுக்குட்பட்டவா்கள்
- ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தது மூன்று ஆண்டுகளும், பேட்ஜ் உரிமம் பெற்று ஓராண்டும் நிறைவு செய்திருப்பது அவசியம் ஆகும்.
மருத்துவ உதவியாளா்கள் பணிக்கு விண்ணப்பிக்க:
பிஎஸ்சி நா்சிங் அல்லது டிஜிஎன்எம் படிப்பை நிறைவு செய்திருக்கவேண்டும்
வயது வரம்பு 19 - 30 வரை இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
முதல் சுற்று தொலைபேசி வாயிலாகவும், இறுதிச் சுற்று நோ்முகத் தோ்வாகவும் நடைபெறும்.
சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ளவா்கள் 91541 89421 அல்லது 91541 89422 என்ற எண்களில் தொடா்பு கொண்டு தோ்வில் பங்குபெறலாம்.
செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா்கள் 91541 89423 அல்லது 91541 89425 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள கடைசி தேதி 23.07.2020
மேலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொண்டு பணியிடத் தோ்வில் பங்குபெறலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: வேலைவாய்ப்பு