FACT CHECK: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலிஸார் அடிக்கும் வீடியோ என பரவும் வதந்தி...உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
சாத்தான்குளம் அடிக்கும் வீடியோ....... என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவை சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள் அந்த வீடியோவில் ஒருவரை தலைகீழாக கட்டிவைத்து போலிஸார் அடிக்கின்றார்கள் அவரது ........
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ தமிழகத்தில் சாத்தான் குளத்தில் நடந்தது இல்லை
மேலும் அந்த சம்பவம் கடந்த 29.07.2019 அன்று மஹாராட்ராவில் உள்ள நாக்பூரில் நடந்தது
தனது போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்கள் குடி பழக்கத்தில் அடிமையான டிரைவர் ஒருவரை கண்டிக்கும் விதமாக அலுவலக மின்விசிறி மாட்டும் கொக்கியில் கட்டி தொங்க விட்டு அடிக்கும் வீடியோ காட்சி ஆகும் அது அதன் பிறகு அந்த இருவரும் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்
இந்தியாவில் எங்கோ , எப்போதோ நடந்த ஒரு செய்தியினை தமிழகத்தில் நடந்தது போல் ஷேர் செய்கின்றார்கள் எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியா ஆதாரம்
அட்மின் மீடியா ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி