Breaking News

FACT CHECK: ரயில் நிலையத்தில் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தை தத்து எடுத்தாரா நடிகர் ஷாருக்கான்? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
ரயில் நிலையத்தில் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தை தத்து எடுத்த நடிகர் ஷாருக் கான் என்று ஒரு செய்தியை சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

கொரானா ஊரடங்கினால் வெளீமாநில தொழிளார்கள் வேலை இழந்து அங்காங்கே சிக்கி கொண்டார்கள் , அவர்கள் சொந்த மாநிலம் செல்ல மத்திய அரசு சிறப்பு ரயிலை இயக்கியது

இந்நிலையில்  ஆமதாபாத்தில் இருந்து கதிஹார் சென்ற சிறப்பு ரயிலில்  பிஹாரின் முசாபர்பூர் அருகே சென்றபோது அந்த ரயிலில் ப்தன் இரு குழந்தைகளுடன் பயனம் செய்த அந்தப் பெண் இறந்துள்ளார். இதையடுத்து, உடலை பிரேதப் பரிசோதனைக்கு ஆம்புலன்சில் அனுப்புவதற்காக முசாபர்பூர் ரயில் நிலையத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.

ஒரு துணியால் உடல் மூடப்பட்டிருந்த நிலையில் அவரது ஒன்றரை வயது மகன், தனது தாய் தூங்கிக் கொண்டிருப்பதாகக் கருதி துணியைப் பிடித்து இழுத்து எழுந்திருக்கச் சொல்லும் காட்சியின் விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது. குழந்தையின் அந்தச் செயல் பார்த்தவர்களைக் கண்கலங்கச் செய்தது.

அது சம்மந்தமாக அட்மின் மீடியாவும் செய்தி வெளியிட்டது



மேலும் அந்த குழந்தைகளை சந்தித்து பலர் தங்களால் ஆன பல உதவிகளை செய்து வருகின்றார்கள் சில நாட்களுக்கு முன்பு பீகார் மாநில SDPI தலைவர் அந்த குழந்தையை சந்தித்து ஆறுதல் குறி  அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கின்றோம் என்று கூறினார்கள், அந்த புகைபடமும் சமூகவலைதளங்கலில் அவர்கள் அந்த குழதையை தத்து எடுத்ததார்கள் என பரவியது நாமும் அதற்க்கு மறுப்பு செய்தி வெளியிட்டு இருந்தோம்

அதே போல் அந்த குழந்தையை நடிகர் ஷாருக்கான் ந்டத்தும்  மீர் ஃபவுண்டேசன் மூலமாக அந்த குழந்தையின் படிப்பு செலவுகளை ஏற்றுகொள்வதாக அறிவித்தார் 

ஆனால் சமூக்வலைதளங்களில் பலர் நடிகர் ஷாருக் கான் அந்த குழந்தைகளை தத்து எடுத்ததாக பரவுகின்றது நடிகர் ஷாருக்கான் த்த்து எடுத்ததாக கூறவில்லை மாறாக தாத்தாவின் பராமரிப்பில் இருக்கின்ற குழந்தைகளூக்கு நாங்கள் எங்களின் மீர் ஃபவுண்டேசன் மூலமாக உதவிகள் செய்கின்றேம் எனறுதான் கூறியுள்ளார்

அட்மின் மீடியா ஆதாரம்



அட்மின் மீடியா ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்



Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback