FACT CHECK: பீகார் ரயில் நிலையத்தில் தாயை இழந்த குழந்தையை தத்தெடுத்த SDPI தலைவர் செய்தி உண்மையா?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பீகார் முஸப்பர் நகர் இரயில் 
நிலையத்தில் தாயை இழந்து நிர்க்கதியான குழந்தையை பீகார் மாநில SDPI தலைவர் 
நசீம் அக்தர் தத்தெடுத்தார்.என்று  ஒரு செய்தியுடன் புகைபடத்தையும் ஷேர் செய்து வருகின்றார்கள்
. அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அதில் அவர் ரயில் நிலையத்தில் தாய் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் உடனடியாக நானும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள்  அனைவரும் நேரில் சென்று இறந்து போன அந்த தாயின் குடும்பத்தையும் குழந்தைகளையும்  சந்தித்து ஆறுதல் கூறினோம். இதுவரை அந்த குடும்பத்தை அரசு அதிகாரிகள் சந்திக்கவோ, உதவிகளை வழங்கவோ செய்யவில்லை இது தொடர்பாக நாங்கள் விரைவில் மாவட்ட அதிகாரியைச் சந்தித்து குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்கான கோரிக்கையை வைப்போம் என்று பதிவிட்டுள்ளார்
அந்த பகுதிக்கு நேரடியாக சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது 
தான் உண்மை. ஆனால் அவர் குழந்தைகளை தூக்கி வைத்திருந்ததை பார்த்து அவர் 
தத்தெடுத்து விட்டார் அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டார் என்று சமூக 
வலைதளங்களில் பலரும் பரப்பி விட்டார்கள்.
அட்மின் மீடியாவின் ஆதாரம் 
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி
