Breaking News

FACT CHECK :இந்திய கடற்படை ராணுவ அதிகாரிகள் ஜனாதிபதியின் முன்னிலையில் ஆயத்துல்குர்ஸி ஓதி உறுதி மொழி எடுத்தார்களா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  சரித்திரத்தில் முதல் முறையாக இந்திய கடற்படையின் பரேட்  கிரவுண்ட்டில் பயற்சி முடித்த புதிய ராணுவ அதிகாரிகள் உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சியில் ஜனாதிபதியின் முன்னிலையில் ஆயத்துல்குர்ஸி ஓதும் காட்சி. என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தியின்  உண்மை என்ன?

கடந்த நவம்பர்- 2019 அன்று கேரளாவில் உள்ள எஜிமலா கடற்படை அகாடமியில் இந்திய கடற்படை அகாடமிக்கு ஜனாதிபதியின்  வண்ணம் விருது  வழங்கப்பட்டது 

இந்த விருதை ஐ.என்.ஏ சார்பாக அகாடமி கேடட் கேப்டன் சுஷில் சிங் 730 கேடட்கள் மற்றும் 150 ஆண்கள் காவலர் ஆப் ஹானர் அடங்கிய அணிவகுப்பில் பெற்றார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் மாண்புமிகு ஜனாதிபதியால் சிறப்பு அஞ்சல் அட்டையும் வெளியிடப்பட்டது

அநத நிகழ்ச்சியின்  துவக்கத்தில் இந்து, கிறிஸ்துவர், சீக்கியர் மற்றும் முஸ்லிம்  மதங்களை சார்ந்த நான்கு மத குருமார்களும் தங்களின் வேதம் ஓதினார்கள் 

ஆனால் சிலர் அதில் இஸ்லாமியர்கள் ஆயத்துல்குர்ஸி ஓதும் காட்சியினை மட்டும் எடிட் செய்து பரப்புகின்றார்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

பலரும் பரப்பும் அந்த வீடியோவின் முழுவதையும் பார்க்க


https://youtu.be/MW0E6HLt3gI

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback