FACT CHECK: கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கீழடியில் கண்டு எடுக்கபட்ட நடராஜர் சிலை என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
அந்த சிலை கீழடியில் கண்டு எடுக்கப்பட்டது இல்லை
மேலும் கீழடியில் இதுவரை எந்த சிலைகளும் கண்டு எடுக்கப்படவில்லை
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கீழடியில் நடந்தது இல்லை மாறாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் அருகே உள்ள கண்ணந்தங்குடி கிராமத்தில் உள்ள அரிவெட்ட நாயனார் கோவிலுக்கு கடந்த 19.05.2017 சுற்றச்சுவர் அமைக்க பள்ளம் தோண்டியபோது அந்த சிலைகள் கிடைத்துள்ளது

அட்மின் மீடியாவின் ஆதாரம்
ஆனால் சிலர் அந்த சம்பவம் கிழடியில் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி