Breaking News

FACT CHECK: *#62# என டயல் செய்யும் போது Call forwarding என்று வந்தால் நீங்கள் கண்காணிக்கபடுகின்றீர்களா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
நீங்கள் ஆன்ராய்ட் போன் வைத்து இருக்கின்றிர்களா சூப்பர் இன்பர்மேஷன் 
*#62# என டயல் செய்யும் போது Call forwarding என்று வந்தால் உங்களுடைய விசயங்கள் எல்லாம் கவனிக்கப்படுகின்றது என அர்த்தம் என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


பல வருடங்களாக சமுக வலைதளத்தில் பொய்யாக இந்த செய்தி பரப்பப்படுகின்றது

Call forwarding என்றால் என்ன?

Call forwarding என்பது ஒருவரிடம் இருந்து உங்களுக்கு வரும் அழைப்புகளை வேறொரு மொபைல் எண்ணிற்கு forward செய்வது  இந்த முறையில் உங்களுக்கு வரும் அனைத்து அழைப்புகளையும் forward செய்யலாம், 

உதாரணமாக:

உங்கள் போன் சிக்னல் இல்லாத நேரத்தில் யாராவது உங்களுக்கு போன் செய்தால் பார்வர்டு ஆப்ஷன் பயன்படுத்தி உங்களுக்கு வரும் அழைப்புகள் வேறு எண்ணுக்கு மாற்றி கொள்ளமுடியும்


Call forwarding செய்வது எப்படி?


 *#62# என டயல் செய்யும் போது Call forwarding என்றும், அதனுடன் +9157010 என்ற என்னும்( ஒவ்வொருவருக்கும் எண் வேறுபடும்) வருகிறது. 

இதன்பிறகு மொபைலில் உள்ள call settings சென்று Call forwarding உள்ளே சென்று பார்க்கையில் Forward when unreachable தவிர மற்ற அனைத்திலும் Disable என்றே இருக்கும்.

*#62# என டயல் செய்த போது வந்த +9157010 என்ற எண்ணே Forward when unreachable-லில் இடம்பெற்றுள்ளது. இதுmobile operator வழங்கும் Default எண். 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்கள் வழங்கப்பட்டு இருக்கும். அந்த எண்ணிற்கு போன் செய்து பார்த்தால் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என்று வரும். 

காரணம் உங்கள் செல்போன் not reachable ஆக இருக்கும் போது மட்டுமே அழைப்புகள் இந்த எண்ணிற்கு forward செய்யப்படும் “.

Call forwarding செட்டிங்கை நீக்குவது எப்படி?

Forward when unreachable தவிர மற்ற option-களில் call forward செய்ய வேறொரு செல்போன் எண்கள் கொடுக்கபட்டால் அதனை disable செய்ய ##002# என்று டயல் செய்தால் போதும். Call forwarding Erase ஆகியதாக காண்பிக்கும்.

அதன்பின் settings சென்று பார்க்கையில் ஒரு சிலருக்கு Forward when unreachable இல் உள்ள எண் மாறாமல் இருக்கும். 

அதன் மூலமே உங்கள் செல்போன் not reachable அல்லது switched off என்ற voice செல்கிறது. 

அந்த எண்ணை மாற்ற வேண்டும் என்றால் உங்களின் mobile operator-யை தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ளலாம்.

Call forwarding மூலம் நம் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறதா ?


ஆக, Call forwarding மூலம் நமக்கு வரும் செல்போன் அழைப்புகளை forward மட்டுமே செய்ய முடியும், நம்முடைய செயல்களை கண்காணிக்க முடியாது என்பது உறுதியாக தெரிகிறது.

call forward மூலம் நமக்கு வரும் அழைப்புகளை forward செய்ய முடியுமே தவிர நமது தகவல்கள், நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும் என்பது தவறான தகவல். 


அட்மின் மீடியா ஆதாரம்


அட்மின் மீடியா ஆதாரம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback