Breaking News

FACT CHECK: 500 கோடிக்கு சொத்துக்கு அதிபதி புனேவைச் சேர்ந்த தொழில் அதிபர் முகுல்வன்சியின் கடைசி நிலை? என்ற வீடியோவின் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சிலநாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் 1500 கோடிக்கு சொத்துக்கு அதிபதி புனேவைச் சேர்ந்த தொழில் அதிபர் முகுல்வன்சியின்  கடைசி நிலை என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையாயும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

நாம் தேடியவரையில்  புனேயில் தொழில் அதிபர் முகுல்வன்சி என்ற பெயரில் யாரும் கிடையாது

ஆனால் முகுந் கென்னி என்ற பெயரில் மகாராஷ்ட்டிராவில் ஒருவர் உள்ளார். அவர் மகாராஷ்டிராவின் தானே வில்  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலராகவும் உள்ளார் மேலும் அவர் கொரானாவினால் கடந்த  10.06.2020 அன்று உயிரிழந்துள்ளார்

அவர் கொரேனா பாதிப்பால் இருக்கும் போது டிவிட் செய்து உள்ளார்

கொரேனா பொது சேவையில்  இருக்கும்  நான், துரதிர்ஷ்டவசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். உங்கள் அனைவரின் நல்வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்களுடன், நான் விரைவில் உங்கள் சேவைக்கு திரும்புவேன். அதுவரை, அரசாங்கம் வகுத்துள்ள விதிகளை கடைப்பிடித்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்! என குறிப்பிட்டு இருந்தார்

அவர் இறந்த உடன் அவரை அவரது மகன் நல்லமுறையில் அடக்கம் செய்துள்ளார் 

ஆனால் பலரும்  அவரை அடக்கம் செய்த வீடியோ என இந்த வீடியோவை சமூகவலைதளங்களில்ஷேர் செய்து வந்துள்ளார்கள்

அந்த வீடியோ தனது தந்தை அடக்கம் செய்யபடும் வீடியோ இல்லை எனவும் அந்த போலிவீடியோவை ஷேர் செய்யும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க்கும் படி  அவரது மகன் மந்தர் கெனி  கல்வா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகார் குறித்து போலிஸார் வழக்கு பதிவும் செய்துள்ளார்கள்


அட்மின் மீடியா ஆதாரம்



அட்மின் மீடியா ஆதாரம்


அட்மின் மீடியா ஆதாரம்

`
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback