Breaking News

FACT CHECK: மாயன் காலண்டர் படி அடுத்த ஜூன் 21 2020’ல் உலகம் அழியும் என்ற செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  உலக அழிவு உறுதி..? மாயன் காலண்டர் படி அடுத்த ஜூன் 21 2020’ல்  உலகம் அழியும் என்ற ஒரு செய்தியினை பலரும்  ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


இது போல் வதந்திகள் இந்த உலகிற்க்கு புதிது இல்லை

அடிக்கடி கால இடைவெளி விட்டு அவ்வப்போது இது போல் வதந்திகள் வந்துகொண்டுதான் உள்ளன

பல முறை உலகம் அழியப் போகிறது என்கிற கணிப்புகள் வந்த வண்ணமே உள்ளன அவற்றை வைத்து பல திரைப்படங்களிலும் எடுத்து விட்டார்கள். திரைப்படங்களில் உலகம் அழிந்து விட்டதே தவிர நிஜத்தில் அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை 

முதலில் 2000 ஆண்டில் உலகம் அழிந்து விடும் என்று கூறப்ப்டடது

அடுத்து சுமேரியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட நிபிரு கிரகம் பூமியை நோக்கி வருவதாகவும், இதனால் 2003ஆம் ஆண்டு உலகம் அழிந்துவிடும் என்று கூறினர்.

அடுத்து  2012ஆம் ஆண்டு உலகம் அழிந்துவிடும் என்று கூறினார்கள்

அடுத்து 2020 ம் ஆண்டு உலகம் அழிந்துவிடும் என்று கூறினார்கள

சில விஷயங்கள் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும் அதில் இந்த உலகம் எப்போது அழியும் என்பதும் ஒன்று.

எனவே இதுவரை இதுபோன்ற வதந்திகளை எப்படி கடந்து வந்தோமோ  அதேபோல்  இதையும் கடந்து செல்வோம்.

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this