Breaking News

திருத்தம்: இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு: பணம் கட்டியவர்கள் பணத்தை திரும்ப பெற்றுகொள்ள விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

இந்த ஆண்டு தங்கள் ஹஜ் பயணத்தை ரத்து செய்ய விரும்பும் யாத்ரீகர்களுக்கு முக்கிய அறிவிப்பு:  

இவ்வாண்டுக்கான ஹஜ் பயண ஏற்பாடுகள் செய்வதற்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்களே உள்ள நிலையில் சௌதி அரேபியா அரசாங்கத்திடமிருந்து எவ்வித உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் ஹஜ் பயண ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு!



ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டு பணம் செலுத்தியவர்கள் தாங்கள் செலுத்திய முழு தொகையையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து ஹஜ் கமிட்டி முகவரிக்கு அனுப்பி வைத்த பின்னர் அவர்களுக்கான தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என ஹஜ் கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தங்கள் ஹஜ் பயணத்தை ரத்து செய்ய விரும்பும் யாத்ரீகர்கள் ஹஜ் கமிட்டி இணையதளத்தில் சென்று  ரத்து  செய்யும் படிவத்தை நிரப்பி மற்றும் வங்கி பாஸ் புக் / ரத்து செய்யப்பட்ட காசோலை நகலுடன் ceo.hajcommittee@nic.in க்கு மின்னஞ்சல் அனுப்பவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback