அமீரகத்தில் நாளை முதல் அனைத்து பள்ளிவாசல்களும் திறக்கப்படும்.!! வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்தில் மசூதிகள், கோவில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் நாளை முதல் ஜூலை மாதம் 1 ம் தேதி முதல் மீண்டும் வழிபாட்டிற்காக திறக்கப்படவுள்ளது
மேலும் வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும் 30 சதவீத எண்ணிக்கையின் அடிப்படையிலேயே வழிபாட்டிற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும்
வெள்ளிக்கிழமைகளில் மசூதிகளில் நடைபெறும் ஜும்மா தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மறு அறிவிப்பு வரும் வரையிலும் இந்த தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
வழிபாட்டுதளங்களில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்
பள்ளிவாசலுக்கு வருபவர்கள் தங்களுக்கிடையில் 3 மீட்டர் இடைவெளியை பராமரிக்க வேண்டும்.
பள்ளிவாசலுக்கு வருபவர்கள் தங்கள் சொந்த முசல்லாவை கொண்டு வர வேண்டும்.
அனைத்து வழிபாட்டாளர்களும் அல்ஹோஸ்ன் (Al Hosn) என்ற ட்ராக்கிங் அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும்
மேலும் ஒருவருக்கொருவர் கைகுலுக்குவதற்கு அனுமதி இல்லை.
தொழுவதற்கு முன்பாக மேற்கொள்ளப்படும் ஒளுசெய்தலை வீட்டிலேயே செய்துவிட்டு வரவேண்டும்
நாள்பட்ட நோய்கள் மற்றும் முதியவர்கள் போன்ற நோய்தொற்று எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் மசூதிகளுக்கு செல்லக்கூடாது.
Source:
Tags: வெளிநாட்டு செய்திகள்