Breaking News

அமீரகத்தில் ஊரடங்கால் இந்தியா செல்ல பணமின்றி தவிப்பவர்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்கும் அல் ஆதில் நிறுவன சேர்மன்..!!

அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பால் வேலையை இழந்தவர்கள் மற்றும் வேலை தேடி அமீரகத்திற்கு வந்தவர்களில் தற்பொழுது சிறப்பு விமானத்தில் இந்தியாவிற்கு செல்ல காத்துக்கொண்டிருக்கும் பலரும், விமான டிக்கெட்டிற்கான பணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.


அவர்களுக்கு  ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த அல் ஆதில் டிரேடிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் தனஞ்சய் தாதர் உதவி செய்து வருகின்றார்

 
இது குறித்து டாக்டர் தனஞ்சய் தாதர்  கொரானா ஊரடங்கால் பலர் இந்திய அரசால் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம்  தாய்நாட்டிற்க்கு  செல்வதற்கான விமான டிக்கெட்டையும் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தையும் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர் என்பது தெரிந்து அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளேன்


நீங்கள் அமீரகத்தில் இருந்து பணம் இல்லாமல் சொந்த நாடு திரும்ப முடியாமல் கஷ்டபடுறீங்களா உடனே இந்த நம்பருக்கு கால் பன்னுங்க என்று அவரது நம்பரையும் கொடுத்துள்ளார்: +971 50 675 9191

Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this