Breaking News

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர். செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 6 வரை அவகாசம்

அட்மின் மீடியா
0
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர். செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மின் கட்டணம் செலுத்த ஜூலை 6ம் தேதி வரை  வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.


முன்னதாக ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கு தமிழக அரசு ஜூன் 6 ம் தேதி வரை கால அவகாசம் அளித்தது. 

இந்நிலையில் மின்வாரியம் இன்று  வெளியிட்ட அறிக்கையில் : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர். செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மார்ச் 25 முதல் நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்த ஜூலை 6 வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. 

மேலே உள்ள 4 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

\

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback