பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியல் தேர்வை தவற விட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பிளஸ் 2 வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியல் தேர்வை தவற விட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புதேர்வை தவறவிட்டதற்கான காரணத்தை குறிப்பிட்டு மீண்டும் எழுத விருப்பம் தெரிவித்து தலைமை ஆசிரியர்களிடம் கடிதம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் தேர்வுகளை சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் பேருந்து கிடைக்காத காரணம் மற்றும் தேர்விற்கு மறுநாள் ஊரடங்கு போன்ற பிரச்சனைகளின் காரணமாக தேர்வு இயலாத சூழல் ஏற்பட்டது.
இதன் அடிப்படையில் மாணவ மாணவியருக்கு தமிழக அரசு மறுவாய்ப்பு அளித்துள்ளது. இந்த விருப்ப தேர்வுகளின் பட்டியலை பள்ளியின் தலைமை ஆசிரியர் மாவட்ட தேர்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்