2 ரூபாய்க்கு கொரோனா மருந்து: தமிழக டாக்டர் கண்டுபிடிப்பை ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அட்மின் மீடியா
0
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வசந்தகுமார் என்பவர் கொரானா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபித்துவிட்டதாகவும் இதுகுறித்த ஆராய்ச்சி குறிப்புகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தேன் ஆனால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. எனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிட வேண்டும்’என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் கண்டுபிடித்துள்ள பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்ஸ் மருந்து கொரோனா வைரஸ் செல்கள் உடலில் நுழையவிடாமல் தடுக்கும் எனவும் இந்த மருந்தின் விலை ரூ.2-க்கு குறைவானது தான் மேலும் இந்த மருந்தை உட்கொண்டால் கொரோனா அறிகுறி, காய்ச்சலாக மாறாமல் தடுக்கும் என மனுதாரர் வ்ழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் மருந்து குறித்து ஆய்வு செய்வதற்காக அந்த ஆய்வு அறிக்கையை மனுதாரர் மீண்டும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பிவைக்க வேண்டும். இந்த ஆய்வு அறிக்கையை பரிசீலித்து மருத்துவ கவுன்சிலும், மத்திய அரசும் உரிய முடிவை விரைவாக அறிவிக்க வேண்டும்’என்று உத்தரவிட்டனர்.
Tags: தமிழக செய்திகள்