Breaking News

டெலகிராமில் இ -பேப்பர் சேனல்களை நீக்க 2 நாள் கெடு: டில்லி உயர் நீதிமன்றம்

அட்மின் மீடியா
0
டில்லியைச் சேர்ந்த பிரபல தினசரி பத்திரிகை dainik jagran  டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்  எங்கள் நிறுவனத்தின் தினசரி பத்திரிகையின் இ - பேப்பர்' படிக்கும் வசதியை நாங்கள் சந்தா செலுத்துவோருக்கு மட்டும் வழங்குகின்றோம்

இந்நிலையில் டெலிகிராமில் எங்கள் அனுமதியின்றி தினமும் இலவசமாக சட்ட விரோதமாக  இ - பேப்பர்ஷேர் செய்யப்படுகின்றது

எங்கள் மின்னணு பத்திரிகை இலவசமாக பகிரப்படுவதால் எங்களுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே, காப்புரிமை சட்டத்தை மீறி, மின்னணு பத்திரிகையை வெளியிடும் சேனல் மற்றும் அதற்கு தளம் அமைத்துக் கொடுத்துள்ள, டெலிகிராம் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மின்னணு பத்திரிகை பகிர்வதை தடை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், காப்புரிமை சட்டத்தை மீறிய சேனல்களை, 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என, டெலிகிராம் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. 

அத்துடன், சேனல் உரிமையாளர்களின் விபரங்களையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. 



Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback