குவைத் ரெசிடென்ஸ் விசா வைத்துள்ளவர்கள் நாடு திரும்புவதற்கான சலுகை காலம் 12 மாதங்களாக நீட்டிப்பு.!!
அட்மின் மீடியா
0
ரெசிடென்ஸ் விசாவில் வெளிநாட்டவர்கள் நாடு திரும்புவதற்கான சலுகை காலம் 12 மாதங்களாக நீட்டிப்பு. குவைத் உள்துறை அமைச்சகம் தகவல்
கொரானா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் காரணமாக, செல்லுபடியாகும் குவைத் ரெசிடென்ஸ் விசா வைத்திருந்தும் குவைத் நாட்டிற்கு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் குவைத் குடியிருப்பாளர்களுக்கு நாடு திரும்ப ஓரு சலுகையை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
விமான போக்குவரத்து தடையினால் குவைத் நாட்டிற்கு உரிய நேரத்தில் திரும்ப முடியாத வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் குவைத் குடியிருப்பாளர்கள், குவைத் நாட்டிற்குள் மீண்டும் திரும்புவதற்காக வழங்கப்படும் 6 மாத சலுகை காலம், தற்போது 12 மாதங்களாக உயர்த்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags: முக்கிய செய்தி வெளிநாட்டு செய்திகள்