10 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் எப்படி வழங்கப்படும்: விளக்கம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இறுதி தேர்வுக்கான மதிப்பெண் எப்படி நிர்ணயம் செய்யப்படும் என்று சிறு விளக்கம்
காலாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்ணில் இருந்து 40% மதிப்பெண் எடுக்கப்படும்.
அரையாண்டு தேர்வில் இருந்து 40% மதிப்பெண் எடுக்கப்படும்.
மேலும் வருகைப்பதிவேடு அடிப்படையில் 20% மதிப்பெண் எடுக்கப்படும்.
இதன் மூலம் 100% மதிப்பெண் கணக்கிடப்பட்டு இறுதி மார்க் சீட் வழங்கப்படும்.
இந்த மார்க் மூலம் மாணவர்கள் 11ம் வகுப்பில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணத்திற்கு
உங்கள் மகன்/மகள்,
காலிறுதியில் - 350
அரையிறுதியில் - 400
மதிப்பெண்கள் எடுத்து 100% வருகைப் பதிவேடு வைத்திருந்தால்
அவருக்கான பொதுத்தேர்வு மதிப்பெண்கள் - 400
கணக்கீடு
(350 x 40 ÷ 100) காலாண்டு
(400 x 40 ÷ 100) அரையாண்டு
+ 100 (வருகை பதிவேட்டை பொறுத்து) = 400