Breaking News

FACT CHECK: கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் மீது காதல் இணையத்தில் பரவும் கொரோனா காதல்கதை> உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  எகிப்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் மீது காதல் வயப்பட்ட நோயாளி என்று  ஒரு செய்தியினையும் புகைபடததையும்  ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த புகைபடத்தில்  உள்ள அந்த பெண்  மருத்துவர் இல்லை 

அந்த ஆண்  கொரானா நோயாளியும் இல்லை

என்ன டா இது என்று ஆச்சர்யமாக உள்ளதா? ஆம் அவர்கள் பெயர் முஹமது பஹ்மி,  மற்றும் அய மொஸ்பா அவர்களுக்கு கடந்த  2018-ம் ஆண்டே நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாகவும், தற்போது நடத்திய திருமண போட்டோ ஷூட் தான் இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புகைப்படங்களை எடுத்த புகைப்படக்கலைஞர் முகமது சலீம் இந்த புகைப்படங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

அதில், இது ஒரு திருமண போட்டோ ஷூட், அவர்கள் இருவருமே நலமாக இருக்கிறார்கள். யாருக்கும் கொரோனா இல்லை. கொரொனா போன்ற கடினமான சூழலில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைப்பதற்காக இந்த வித்தியாசமான போட்டோ ஷூட்டை நடத்தினோம் என தெரிவித்துள்ளார். 

எனவே, திருமண போட்டோ ஷூட்டை கொரோனா காதல் என இணையவாசிகள் தவறாக நினைத்து பதிவிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்



Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback