Breaking News

ஆதாம் நபியின் கால் பாதம், கபுர் மற்றும் ஆடையா இது? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக் வலைதளங்கலில் பலரும் ஆதம் அலைஹி வஸல்லம் அவர்கள் அணிந்த ஆடை இது என்றும்  அவர்களின் பாத சுவடு என்றும், அவர்களின் அடக்கஸ்தலம் என்று ஒரு  புகைப்படத்தினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்




அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன




அதில் கூறபட்டுள்ள செய்தி 3 ஆகும் 

1 வது செய்தி சட்டை, 



ஆதாம் நபி அவர்கள் இந்த உலகின் முதல் மனிதர் என்று புனித அல்குரானிலும் பைபிளிலும் கூறபட்டுள்ளது 

மேலும் அவர்கள் காலத்தில் இலைகள் கொண்டு தான் ஆடைகள் இருந்துள்ளது மேலும் கற்கால மனிதகாலத்தில் அவர்கள் ஆடைகள் துணியால் இருந்ததில்லை மேலும் முக்கியமாக அவர்கள் காலத்தில் தையல் மிஷின் இருந்ததாக எந்த வித ஆதாரமும் இல்லை இந்த உலகில்  தையல் மிஷின் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1755. ஆகும் மேலும்  அவர்கள் காலத்தில் பட்டன் இல்லை,    அவர்கள் காலத்தில் நூல் இல்லை இந்த நவின காலத்தில் பட்டன் கண்டுபிடித்தது கிமு 2800 ல் தான் உண்மை நிலை அப்படி இருக்க


ஆதம் நபி அணிந்த சட்டை என்று வாய் கூசாமால் இந்த ரமலான் மாதத்தில் பொய் செய்தியினை ஷேர் செய்கின்றீர்களே இது நியாமா? அப்படியானால் அவ்வளவு பெரிய அந்த சட்டை யாருடயது 


கடந்த 2009 ஆண்டு சவுதி அரேபியாவில் டைய்லர் ஒருவர் ஆதம் நபி அவர்கள் தற்போது இருந்தால் சட்டை எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும் என்று தைத்து பொதுமக்கள் பார்வைக்காக வைக்கபட்ட சட்டை தான் அது

அட்மின் மீடியா ஆதாரம் 



2 வது செய்தி  அடக்கஸ்தலம்,

மேலும் அதில் வரும் மற்றும் ஓர் புகைப்படம் இது தான் ஆதம் நபி அவர்களின் அடக்கஸ்தலம் என்று
அதுவும் பொய்யானது 

அந்த அடக்கஸ்தலம் இம்ரான் நபி ஸல் அவர்களின் அடக்கஸ்தலம் ஆகும் அந்த அடக்கஸ்தலம் ஓமன் நாட்டில் உள்ளது

அட்மின் மீடியா ஆதாரம் 



3 வது செய்தி கால்தடம்


அந்த கால்தடம் இந்தோனேசியாவின் தபக்துவான் நகரத்தின் தெற்கு ஆச்சே கடற்கரையில்  அமைந்துள்ள ஒரு பாறையின் மீது உள்ளது மேலும் அங்கு உள்ள புராணத்தின் படி,குறித்த கால் தடமானது தபா என்ற மாபெரும் சந்நியாசி உடையதாகும் என நம்பப்படுகின்றது.

அட்மின் மீடியா ஆதாரம் 



எனவே இஸ்லாமிய மார்க்கம் கற்றுத் தராத இது போன்ற பொய்யான கட்டுக்கதைகளை நம்பி யாரும் இது போன்ற செய்திகளை பிறரிடம் பரப்பாதீர்கள் இது போல் செய்திகள் அனுப்பி மக்களை முட்டாள்களாக ஆக்காதீர்கள் மேலும் இது போன்ற எந்த மூடத்தனமான செய்திக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ..


மேலும் இத்தகயோரை பற்றி அல்லாஹ் குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்

மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை.
(அல்குர்ஆன் : 2:78)

அல்லாஹ்வை அஞ்சி கொள்ள மாட்டீர்களா!! கேள்வி பட்டதையெல்லாம் அதனை ஆராயாமல் பரப்புபவன் பொய்யன் என்பது நபிமொழி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என் மீது வேண்டுமென்றே பொய் சொல்கிறவர் தம் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி 6197

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback