Breaking News

FACT CHECK: ஆம்பன் புயலை பார்வையிட சென்ற மோடிக்கு எதிராக சவுக்கிதார் சோர் ஹை என்று கோஷம் போட்டார்களா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயலை பார்வையிட சென்ற மோடிக்கு எதிராக சவுக்கிதார் சோர் ஹை, சவுக்கிதார் சோர் ஹை என கோஷம் போட்ட பொதுமக்கள் என ஒரு வீடியோவை பலரும்   ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

கடந்த 20.05.2020 அன்று மேற்கு வங்கத்தை புரட்டி போட்ட ஆம்பன் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது அந்த புயல் சேதத்தை பார்வையிட 22.05.2020 அன்று மேற்கு வங்கம் சென்ற பாரத பிரதமர் மோடி அவர்கள்  சென்ற போது மோடிக்கு எதிராக சவுக்கிதார் சோர் ஹை, சவுக்கிதார் சோர் ஹை என கோஷம் போட்ட பொதுமக்கள் என்று ஷேர் செகின்றார்கள் ஆனால் 


அந்த வீடியோவை யாரோ எடிட் செய்து ஆடியோவை மாற்றி வெளியிட்டுள்ளார்கள் சில அறியாமக்கள் அதனையும் உண்மை என ஷேர் செய்கின்றார்கள் 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவின் உண்மையான அசல் வீடியோ கீழே உள்ள லின்ங்கில் கொடுக்கபட்டுள்ளது

அட்மின் மீடியாவின் ஆதாரம்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback