Breaking News

சிகப்பு , பச்சை ஆரஞ்சு என பிரிக்கபட்டு ஊரடங்கு தளர்வு முழு விவரம்

அட்மின் மீடியா
2
மே 4 ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய  அறிவித்துள்ளது





மேலும் ஊரடங்கை படிப்படியாகவே  தளர்த்த வேண்டும் என்ற வல்லுநர் குழுவின் அறிக்கையைக் கருத்தில்கொண்டு  சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை என்வும்

ஆனால் பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


சிவப்பு மண்டலங்களின் கட்டுப்பாடுகள்

சிவப்பு மண்டலமாக உள்ள பகுதிகளில் இந்த ஊரடங்கில் எந்த தளர்வும் இருக்காது. மற்ற பகுதிகளில் இருக்க வாய்ப்புள்ளது


  • நாடு முழுவதும் மே 18 வரை பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் இயங்காது

  • ஓட்டல்கள், தியேட்டர்கள், உடல் பயிற்சி கூடங்களுக்கு அனுமதி இல்லை

  • மத வழிபாடுகள், அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க தடை தொடரும். சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ, கார் இயக்கத்தடை தொடரும்.

  • விமானம், ரயில், மெட்ரோ மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அடுத்த 21 நாட்களுக்கு இயங்காது.

  • மக்கள் அதிகமாகக்கூடும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது.

  • சிவப்பு மண்டலங்களில் தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும். ஏணைய ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணி என்ற வகையில் செயல்பட வேண்டும்.

  • சிவப்பு மண்டலங்களில் 2 சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டும் பயணிக்கலாம்.

  • சிவப்பு மண்டலங்களில் நகர பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் இயங்க அனுமதி.

  • அத்தியாவசிய தேவையின்றி இரவு 7 மணி முதல் காலை 7 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது.

  • முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டுக் கண்டிப்பாக வெளிவரக்கூடாது.

  • சரக்கு போக்குவரத்து எந்த தடையும் இல்லை பாஸ் வாங்கவும் தேவையில்லை



ஆரஞ்சு வண்ண பகுதிகளுக்கான அறிவிப்புகள்


  • ஆரஞ்சு வண்ண மாவட்டங்களில் வாடகை கார்கள் ஒரு பயணியுடன் மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்படும்.
  • மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்.
  • மேலும் 2 வாரங்களுக்குச் சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை.


பச்சை மண்டலங்களில் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்

  • பசுமை மண்டலத்தில் பேருந்துகள் 50% பயணிகளுடன் மட்டுமே இயங்க வேண்டும். மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்.
  • 4 சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 3 பேரும், இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 2 பேரும் செல்லலாம்.
  • நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • பேருந்து டெப்போக்களில் 50 சதவீத பேருந்துகளை மட்டுமே இயக்க வேண்டும்.*
  • பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல பகுதிகளில் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கும் இ-வணிகத்தில் அனுமதி.
  • கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் மதுக்கடைகள், பீடா கடைகள் திறக்கலாம்.
  • மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை நீடிக்கும்

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

2 Comments