அமீரகத்தில் இன்று முதல் பாஸ்போர்ட் அலுவலகம் முழுநேரமும் செயல்படும்..!! தூதரகம் அறிவிப்பு..!!
அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கான ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதை முன்னிட்டு, துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம் அதன் பாஸ்போர்ட் மற்றும் சான்றளிப்பு சேவைகள் இன்று முதல் மே 27, புதன்கிழமை செயல்படும் என்று அறிவித்துள்ளது.
பாஸ்போர்ட் மையங்கள் காலை 8 மணி முதல் இரவு 5 மணி வரை திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தூதரகத்திற்கு வரும் அனைத்து விண்ணப்பதாரர்களும் சமூக தொலைதூர விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு முக கவசங்கள் மற்றும் கையுறைகளை அணியுமாறு துணை தூதரகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Tags: முக்கிய செய்தி வெளிநாட்டு செய்திகள்