Breaking News

வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவர்களுக்கு கொரானா பரிசோதனை : தலைமைச்செயலர்

அட்மின் மீடியா
0
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் வெளி மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றவர்கள், வேலைக்காக  சென்றவர்கள் மற்றும் உறவினர்கள் இல்லங்களுக்கு சென்றவர்கள் என பல்வேறு காரணங்களுக்கு சென்றவர்கள் இந்த ஊரடங்கால் 



அங்கேயே சிக்கி  கொண்டார்கள் இந்நிலையில் அவர்கள்  தங்கள்   சொந்த ஊருக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது


இந்நிலையில்  வெளிமாநிலங்கள் அல்லது வெளிமாவட்டங்களில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும்   கொரானா பரிசோதனை நடத்த வேண்டும்  எனவும் அனைவரையும்  14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று அனைத்து  மாவட்ட ஆட்சியர்களுக்கும்  தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க  வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Tags: முக்கிய அறிவிப்பு

Share this