அரேபியர்கள் வெட்டுகிளி சாப்பிடுகின்றார்களே உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெட்டுக்கிளிகளை பையில் அடைத்து அதை சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது என்ற ஒரு வீடியோவை பலர் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி உண்மைதான்
வெட்டுக்கிளி ஒரு பூச்சி இனமாக இருந்தாலும் அது சாப்பிடக்கூடிய ஒரு உணவாக இருக்கிறது. நாம் சாப்பிட மாட்டோம் என்பற்காக யாருமே அதை சாப்பிடக்கூடாது இன்று சொல்லமுடியாது அப்படிப் பார்த்தால் சீனாவில் நாம் எதையெல்லாம் அருவருப்பாக கருதுவோமோ அவை அனைத்தையும் உயிருடனோ அல்லது தீயில் பொரித்தும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதை நாம் தடுக்க முடியாது.
வ
ெட்டுக்கிளிகள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என சிலர் நம்புகிறார்கள் என்றாலும், சிலர் இதை சாப்பிடுவது அசிங்கமானதாகவும், அருவருப்பானதாகவும் கருதுகின்றனர்.
மேலும் கஜார் காலத்தில், தென் ஈரானும் பெர்சியாவும் பஞ்சத்தை எதிர்கொண்டபோது, மக்கள் உயிர்வாழ வெட்டுக்கிளிகளை சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஈரான் மற்றும் வளைகுடா நகரங்களில் உள்ளவர்களும் வெட்டுக்கிளிகளை சாப்பிடுகிறார்கள்.
சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகளில், வெட்டுக்கிளிகள் போன்ற பூச்சிகளின் நுகர்வு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், புரதச்சத்து நிறைந்ததாகவும் உள்ளது,
இருப்பினும், பூச்சிகளின் உடலில் ஏராளமான நுண்ணுயிரிகள் இருப்பதால், சமைப்பதன் மூலமும், வறுப்பதன் மூலமும், அசுத்தங்கள் அகற்றப்பட்டு பல நன்மைகளைப் பெறலாம்.
அட்மின் மீடியா ஆதாரம்
அட்மின் மீடியா ஆதாரம்
அட்மின் மீடியா ஆதாரம்
Tags: FACT CHECK