Breaking News

சர்ச்சில் நடந்த இஸ்லாமிய தொழுகை : முஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட கிறுஸ்துவ தேவாலயம்

அட்மின் மீடியா
0
ஜெர்மனியில் சமூக விலகலுடன் தொழுகை நடத்த அரசு அனுமதித்துள்ள நிலையில் கிறிஸ்தவ தேவாலயத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியது உலகம் முழுக்க வியப்பையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக   பல நாடுகளில் தேவாலயங்கள், மசூதிகள், கோவில்கள் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜெர்மனியில் சமூக விலகலை கடைபிடித்து வழிபாடு நடத்த  அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது இதனால் தேவாலயங்கள், மசூதிகளை திறந்து வழிபாடு நடத்தபட்டு வருகின்றது


இந்நிலையில்  பெர்லின் உள்ள தார் அல் சலாம் மசூதியில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நடந்தபோது முஸ்லிம்கள் அதிகம் வருவார்கள் என்பதால் அருகில் உள்ள Martha Lutheran church முஸ்லிம்களின் தொழுகைக்காக அணுமதிக்கபட்டார்கள் 


அங்கு சமூக இடைவெளியுடன் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்பட்டது. இந்நிகழ்வு மத ஒற்றுமையின் வெளிபாடு என்றே சொல்லலாம்


சர்சில் நடந்த தொழுகை வீடியோ

   


Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback