சவுதி சுற்றுலா விசா கட்டணமின்றி மூன்று மாதங்கள் விசா நீட்டிப்பு : சவுதி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சவுதி சுற்றுலா விசா காலாவதியானவர்களுக்கு கட்டணமின்றி மூன்று மாதங்கள் விசா நீட்டிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட விமான போக்குவரத்து தடையின் காரணமாக, தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாமல் சவூதி அரேபியாவில் வசிக்கும் காலாவதியான சுற்றுலா விசாக்களை வைத்திருப்பவர்களின் விசாவானது தானாகவே மேலும் மூன்று மாதங்களுக்கு கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக நீட்டிக்கப்படும் என்று சவூதி அரேபியாவின் பாஸ்போர்ட் பொது இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விசா நீட்டிப்பானது தானாகவே கணினி மூலம் செய்யப்படுவதாகவும், இதற்காக சம்பந்தப்பட்ட இயக்குநரக அலுவலகங்களுக்கு பயனாளிகள் செல்ல தேவையில்லை என்றும் பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் அறிவித்துள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்