Breaking News

ஆன்லைனில் ரயில் டிக்கெட்டை எளிதாக முன்பதிவு செய்வது எப்படி ? வாங்க பாப்போம்

அட்மின் மீடியா
0

நீங்களே உங்கள் மொபைலில் அல்லது கம்யூட்டரில் உங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வது எப்படி என்பதை பார்ப்போம்



  • முதலில் https://www.irctc.co.in/nget/train-search லின்ங்கை கிளிக் செய்து உங்கள் ஜடி பாஸ்வேர்டு போட்டு லாக் இன் செய்து கொள்ளுங்கள்
  • உங்களிடம் IRCTC ஜடி பாஸ்வேர்டு இல்லை என்றால் IRCTC  திறந்தவுடன் வலது பக்கம் தளத்தில் User ID அடுத்ததாக Sign up விருப்பத்தை  கிளிக் செய்து அதில் கேட்கபட்ட தகவல்களை நிரப்பிய பின்  ஜடி பாஸ்வேடு கிரியேட் செய்தபிறகு  நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். https://www.irctc.co.in/nget/profile/user-registration  இந்த லின்ங்கில் ஜடி பாஸ்வேர்டு கிரியேட் செய்து கொள்ளுங்கள்
  • ஐ.ஆர்.சி.டி.சியின் இணையதளத்தில் லாகின்க்கு பிறகு, நீங்கள் ' 'Book Your Ticket' முன்பதிவு செய்யுங்கள்'.எங்கு செல்லவேண்டும்  பயண தேதி போன்ற தேவையான விவரங்களை நிரப்பி  இப்போது Find Trains என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யுங்கள் அவ்வளவுதான்
  • அடுத்து check availability & Fare யில் கிளிக் செய்வதன் மூலம், சீட் கிடைக்கும் மற்றும் கட்டணம் உங்களுக்குத் தெரியும். நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பினால், இப்போது புக்  என்பதைக் கிளிக் செய்க.
  • அடுத்து  பயணிகளின்  பெயர்கள், பாலினங்கள், இருக்கைகள் மற்றும் வயது போன்றவற்றை நிரப்பி  போன் நம்பர், விலாசம் கொடுத்து அனைத்து தகவல்களையும் சரிபார்த்து, Continue booking என்பதைக் கிளிக் செய்க.
  • கட்டணம் செலுத்துவதற்கு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், போன்ற பல விருப்பங்களை ஐஆர்சிடிசி வழங்குகிறது. தேவைக்கேற்ப நீங்கள் விருப்பத்தை தேர்வு செய்யலாம். இப்பொழுது Make Payment யில் கிளிக் செய்து பணம் செலுத்துங்கள். வெற்றிகரமாக பணம் செலுத்திய பிறகு, உங்கள் டிக்கெட் உங்களுக்கு கிடைக்கும்

 


Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி

Give Us Your Feedback