துபாயில் இருந்து 4 விமானங்கள் தமிழ்கத்திற்க்கு மூன்றாம் கட்ட சிறப்பு விமானங்கள் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் இந்தியாவின் மிகப்பெரிய திட்டமான வந்தே பாரத் எனும் திட்டத்தின் 3ம் கட்டமாக துபாயில் இருந்து தமிழகத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்தவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை வரும் மே 26 முதல் தொடங்கும் என தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி துபாயில் இருந்து நான்கு விமானங்கள் தமிழகத்திற்கு வரஉள்ளது
ஜூன் 2 ஆம் தேதி துபாய் விமான நிலையத்திலிருந்து இருந்து கோவைக்கு ஒரு விமானமும்
ஜூன் 3 ம் தேதி துபாய் விமான நிலையத்திலிருந்து திருச்சிக்கு ஒரு விமானமும்,
ஜூன் 4 ம் தேதி துபாய் விமான நிலையத்திலிருந்து மதுரைக்கு ஒரு விமானமும்
ஜூன் 8 ம் தேதி துபாய் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு ஒரு விமானமும் இயக்கப்படும் என அமீரக இந்திய தூதகரம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.
Tentative schedule of additional flights(as on 24 May 2020) from the #UAE under #VandeBharatMission
— India in UAE (@IndembAbuDhabi) May 24, 2020
Many new destinations added, other destinations will be added in due course in coordination with respective state governments.#WeShallOvercome @AmbKapoor @MEAIndia @cgidubai pic.twitter.com/dPaZlFP4KV
Tags: முக்கிய அறிவிப்பு வெளிநாட்டு செய்திகள்